இந்தியாவில் அதிகமானோர் பயன்படுத்தும் கடவுச்சொல்லை (பாஸ்வேர்டு) பாஸ்வேர்ட் மேலாண்மை நிறுவனமான நார்டபஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இதில் India@123, admin போன்ற கடவுச்சொல்லையே பெரும்பாலானோர் பயன்படுத்துவது தெரியவந்துள்ளது.
மேலும், சர்வதேச அளவில் 123456789, 000000, 12345 என்ற கடவுச்சொல்களை அதிகமானோர் பயன்படுத்துகின்றனர்.
இதை எளிதில் ஹேக் செய்யலாம் என்பதால் இந்த கடவுச்சொல்லை பயன்படுத்த வேண்டாம் என நார்டபஸ் நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.