நாடுமுழுவதும் நடைபெறும் ஆன்லைனில் பணியமர்த்தல் நடவடிக்கைகளை ஆய்வு செய்யும் நிறுவனமான Found It Report வெளியிட்டுள்ள ஜூன் மாதத்திற்கான ஆய்வறிக்கையில், பெங்களூரில் 24% அதிகமாக  பணியமர்த்தல் நடைபெற்றுள்ளதாகவும், அதற்கு அடுத்ததாக கோவையில் 23% நடைபெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு அடுத்து ஜெய்ப்பூர் (21 %), டெல்லி - NCR (18%) மற்றும் ஹைதராபாத் (17%) அதிகம் உயர்ந்துள்ளது. 

நாட்டில் கடந்த 6 மாதங்களில் பணியமர்த்தல் நடவடிக்கைகள் என்பது 15% உயர்ந்துள்ளது எனவும் சென்ற ஆண்டு ஜூன் மாதத்தை விட இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் 12% உயர்வு காணப்பட்டுள்ளது எனவும் தெரியவருகிறது.

உற்பத்தி துறையில் உள்ள முக்கிய பொறுப்புகள் மற்றும் உணவு/உபசரிப்பு துறையில் உள்ள முக்கிய பொறுப்புகளுக்கான பணியமர்தல் தான் IT உள்ளிட்ட பிற துறைகளை காட்டிலும் அதிகம் நடைபெற்றுள்ளது.