தமிழ் நாட்டில் முதல் முறையாக வீடுகளுக்கான கட்டட அனுமதியை ஆன்லைன் மூலம் உடனடியாக வழங்கும் திட்டம் ஜூலை 22ல் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை சார்பில் துவங்கப்பட்டது. 2,500 சதுர அடி வரையுள்ள மனையில் 3,500 சதுர அடி வரை கட்டப்படும் வீடுகளுக்கான இந்த திட்டம் முதலமைச்சர் ஸ்டாலினால் துவக்கி வைக்கப்பட்டது.

 

இதுபற்றி அந்த துறையின் அமைச்சர் முத்துசாமி கூறுகையில், இந்த திட்டம் மூலம் ஆன்லைன் வழியே விண்ணப்பதாரர் அளிக்கும் விபரங்கள் அடிப்படையில் கட்டட உடனடி அனுமதி அளிக்கப்படும். ஆய்வின்போது விண்ணப்பத்தில் இருக்கும் விபரங்கள் சரியாக இருக்க வேண்டும், என்று கூறினார்.

 

www.onlineppa.tn .gov.in எனும் இணையத்தளம் மூலம் இந்த பயனை வீடு கட்ட உள்ளவர்கள் அணுகி பெறலாம்.இதில் பரிசீலனை கட்டணம், உள்கட்டமைப்பு மற்றும் வசதிகள் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.அதே சமயம் பிற வகை கட்டணங்கள் வசூல் செய்வது குறித்த கேள்விக்கு நகராட்சி நிர்வாகத் துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

 

அதில் கூறியுள்ளதாவது:-

உடனடி கட்டட அனுமதிக்கு ஒருங்கிணைந்த முறையில், கட்டணங்கள் நிர்ணயிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 

 

இதன்படி, சென்னை மாநகராட்சியில், சதுர அடிக்கு, ரூ.100 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 

கோவை, திருப்பூர், மதுரை மாநகராட்சிகளில் சதுர அடிக்கு, ரூ.88,தாம்பரம், சேலம், திருச்சி மாநகராட்சிகளில் சதுர அடிக்கு, ரூ.84 கட்டணம். நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

 

ஆவடி, திருநெல்வேலி, வேலுார், துாத்துக்குடி, ஈரோடு மாநகராட்சிகளில் சதுர அடிக்கு, ரூ.79, தஞ்சை, நாகர்கோவில், ஓசூர், கடலுார், கரூர், கும்பகோணம், திண்டுக்கல், சிவகாசி, காஞ்சிபுரம் மாநகராட்சிகளில் சதுர அடிக்கு, ரூ.74 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

 

சிறப்பு நிலை, தேர்வு நிலை நகராட்சிகள் - ரூ.74 முதல் மற்றும் இரண்டாம் நிலை நகராட்சிகள் - ரூ.70,சிறப்பு நிலை பேரூராட்சிகள் - ரூ.70, தேர்வு நிலை பேரூராட்சிகள் - ரூ.65, முதல் நிலை பேரூராட்சிகள் - ரூ.55,இரண்டாம் நிலை பேரூராட்சிகள் - ரூ.45,ஊராட்சிகளில் அவற்றின் நிலைக்கு ஏற்ப சதுர அடிக்கு, ரூ.15 முதல் 27.