தீபாவளிக்கு இன்னும் 2 நாட்கள் தான் மீதம் உள்ள நிலையில் கோவையில் பணிபுரியும் பிற மாவட்டங்களை, மாநிலங்களை சேர்ந்தவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வதற்காக பேருந்து நிலையம், ரயில் நிலையம் ஆகிய பகுதிகளில் குவிந்து வருகின்றனர். 

கோவை ரயில் நிலையத்தில் கடும் கூட்டநெரிசல் நிலவுவதால் ரயில்வே போலீசார் கூடுதல் பணியாளர்களை நியமித்து பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளனர். ரயில் நிலையம் முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் மக்கள்/பயணிகள் நகர்வுகள்  தீவிரமாக கவனிக்கப்பட்டு வருகிறது.

இத்துடன், பயணிகள் தங்கள் உடைமைகளை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்றும், அடையாளம் தெரியாத நபர்களிடம் பொருட்களை ஒப்படைக்கக் கூடாது எனவும் ரயில்வே போலீசார் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர். 

நேற்று இரவு கோவை சிங்காநல்லூர் பேருந்து நிலையம் மற்றும் அதன் சுற்றி உள்ள பகுதிகளில் ட்ரோன் காட்சிகள் மூலமாக போலீசார் கண்காணித்தனர். 

உக்கடம் பேருந்து நிலையத்தில் சீரமைப்பு பணிகள் நடந்துவரும் நேரத்தில் பயணிகள் சொந்த ஊர் திரும்ப பேருந்து நிலையத்தில் நிழலில் காத்திருக்க டென்டுகள் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

PC: Thangappa/Media7