தீபாவளிக்கு கோவையிலிருந்து பிற மாவட்டங்கள் செல்வோர் எந்தெந்த பேருந்து நிலையத்திற்கு செல்லவேண்டும்? இதோ தகவல்
- by David
- Oct 16,2025
2025 தீபாவளியை முன்னிட்டு கோவை மாவட்டத்தில் பணிபுரியும் பிரமாவட்டங்களை சேர்ந்த மக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு எளிதாக செல்ல அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் தயார் நிலையில் உள்ளன.
17.10.25 முதல் 20.10.25 வரை 4 நாட்களுக்கு மொத்தம் 2,675 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக கோவை மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிங்காநல்லூர் பேருந்து நிலையத்திலிருந்து மதுரை, தேனி, திண்டுக்கல், மற்றும் தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் இயங்கும்.
சூலூர் பேருந்து நிலையத்திலிருந்து திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, காரைக்குடி, கரூர் மார்கமாக செல்லும் பேருந்துகள் இயக்கப்படும்.
மேட்டுப்பாளையம் ரோடு புது பஸ் ஸ்டாண்டில் இருந்து ஊட்டி, குன்னூர், கூடலூர் செல்லும் பேருந்துகள் இயக்கப்படும்.
காந்திபுரம் சென்ட்ரல் பஸ் ஸ்டாண்டில் இருந்து மேட்டுப்பாளையம், சத்தியமங்கலம், எரோடே, திருப்பூர் செல்லும் பேருந்துகள் இயக்கப்படும்.
உக்கடத்தில் இருந்து பொள்ளாச்சி, உடுமலை, பழனி, பாலக்காடு செல்லும் பேருந்துகள் இயக்கப்படும்.
முக்கியமாக வெளி மாவட்டங்களுக்கு செல்லும் தனியார் ஆம்னி பேருந்துகள் அனைத்துமே கொடிசியாவில் அனுமதிக்கப்பட்ட இடத்திலிருந்து தான் இயக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.