நாளை மே 16ம் தேதி கோவையில் மின் தடை ஏற்பட வாய்ப்புள்ளதா? இதோ தகவல்
- by CC Web Desk
- May 15,2025
மே 8ம் தேதி கோவை பீளமேடு பகுதியில் மின் தடை ஏற்படும் என அறிவிப்பு வெளிவந்த நிலையில், அந்த நாளில் 12ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளிவருவதால் அறிவிக்கப்பட்ட மின் தடை ஒத்திவைக்கப்படுவதாக மே 8ம் தேதி காலையில் தகவல்கள் வெளிவந்தன.
நாளை (மே 16) காலை 9 மணிக்கு 10ம் வகுப்பு பொது தேர்வு மற்றும் மதியம் 2 மணிக்கு +1 வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளிவருவதால், கோவை மாநகரில் எங்கேயும் நாளை மின்தடை ஏற்பட வாய்ப்பில்லை.
அதேசமயம் தற்போது வெளிவந்திருக்கக்கூடிய சில தகவல் படி, நாளை (16.5.25) அன்று கோவை மாவட்டத்தில் உள்ள பெரியநாயக்கன்பாளையம், நாயக்கன்பாளையம், கோவனூர், கூடலூர் கவுண்டம்பாளையம், ஜோதிபுரம், பிரஸ் காலனி, வீரபாண்டி, செங்காளிபாளையம், பூச்சியூர், சமநாயக்கன்பாளையம், அத்திபாளையம், கோவிந்தநாயக்கன்பாளையம் ஆகிய இடங்களில் காலை 9மணி முதல் மதியம் 2 மணி வரை மின் பராமரிப்பு பணி நடைபெறவுள்ளதால் மின் விநியோகம் நிறுத்தப்படும் என தெரியவருகிறது.
தேர்வு முடிவுகள் வெளிவருவதால் இந்த அறிவிப்பில் மாற்றம் இருக்க அதிக வாய்ப்புகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.