அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களுடன் ஆளுநரை சந்திக்கிறார் EPS
- by David
- Jun 24,2024
Tamil Nadu
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 58 ஆக உயர்ந்துள்ளதை அடுத்து மாநில அரசின் கீழ் உள்ள சி.பி.சி.ஐ.டி. விசாரணை மீது நம்பிக்கை இல்லை என கூறி மத்திய அரசின் கீழ் உள்ள சி.பி.ஐ.க்கு இந்த வழக்கை மாற்ற வேண்டும் என ஆளுநரிடம் பாஜக தரப்பில் இன்று கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்நிலையில் நாளை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆளுநரை நாளை சந்திக்க உள்ளார். கள்ளக்குறிச்சி சம்பவம் குறித்து நாளை ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் நடைபெறும் சந்திப்பில் எடப்பாடி பழனிச்சாமி உடன் அதிமுக எம்.பி., எம்.எல்.ஏக்கள் குழுவும் செல்கிறது. இவர்களும் சிபிஐ விசாரணை வேண்டும் என வலியுறுத்தி மனு அளிக்க வாய்ப்பு உள்ளதாக பார்க்கப்படுகிறது.