கோவை மருதமலையில் உள்ள அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நேற்று கோவில் அறங்காவலர் குழு தலைவர் ஜெயக்குமார் மற்றும் அறங்காவலர்கள் மகேஷ் குமார், பிரேம்குமார், கனகராஜன், சுகன்யா ராஜரத்தினம், துணை ஆணையர் ஹர்ஷினி ஆகியோர் முன்னிலையில் நடந்தது .

 

மொத்தம் 14 பொது உண்டியல்கள் எண்ணப்பட்டன. இதில் ரூ.72 லட்சத்து 72 ஆயிரத்து 64 காணிக்கையாக வசூல் ஆனது.

 

இது தவிர 80 கிராம் தங்கமும் 2570 கிராம் வெள்ளியும், 2600 கிராம் பித்தளையும் இருந்தது என தகவல்கள் கூறுகின்றன.