தமிழக முழுவதும் ஏப்ரல் 19ஆம் தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.

இதை முன்னிட்டு கோவையில் 2763 மாநகர போலீசார், 800 ஊர்க்காவல் படையினர், 300 சிறப்பு காவல் படை போலீஸ் சார் மற்றும் 350 துணை இராணுவத்தினர் என மொத்தம் 4213 போலீசார் நாளை முதல் பாதுகாப்பு பணியை தொடங்க உள்ளனர் என்று கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

அதேபோல கோவை மாவட்ட எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 1000+ போலீசார் பாதுகாப்பணியில் ஈடுபட உள்ளனர். பதட்டமான வாக்குச்சாவடிகளில் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவத்தினரும், பதட்டம் இல்லாத வாக்குச்சாவடிகளில் போலீசார் மற்றும் ஊர்காவல் படையினர் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபடவுள்ளனர். 

வாக்கு எண்ணிக்கை மையத்தில் மூன்றடுக்கு பாதுகாப்பு நிலவவுள்ளது.

படம் : விளக்கத்திற்காக மட்டுமே