கோவை மாநகரில் இந்தாண்டு கோடை வெயில் வழக்கத்தை விட அதிகமாக நிலவிவருகிறது. ஏற்கனவே கோவை மாவட்ட ஆட்சியர் மதியம் 12 மணி முதல் மதியம் 3 மணி வரை முக்கிய பணிகளை தவிர வேறு எதற்காகவும் பொது மக்கள் வெளியே செல்லவேண்டாம் என்று கூறியிருக்கிறார்.

இந்நிலையில் கோவை மாநகரில் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் இந்த வெயில் காலத்தில் பயனடையும் விதமாக மாநகரின் 5 மண்டலங்களில் பொதுமக்கள் அதிகம் கூடும் மொத்தம் 100 இடங்களில் தற்காலிக குடிநீர் தொட்டிகளை அமைத்துள்ளனர். இந்த தொட்டிகள் ஒவ்வொன்றும் மொத்தம் 1000 லிட்டர் கொள்ளளவு கொண்டவை.

இதை தவிர சாலையோரங்களில் சற்று நேரம் நிழலில் அமர்ந்து ஓய்வெடுக்க வழிசெய்யும் விதமாக சாமியான மற்றும் குடிநீர் வசதி விரைவில் கொண்டுவரப்படவுள்ளது.