இன்று (8.5.25/வியாழன்) முதல் கோவை மாநகரில் உள்ள துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக நடைபெறும் மின் தடை அரம்பமாவதாக இருந்தது. அதன்படி இன்று கோவை பீளமேடு துணை மின் நிலையத்தில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின் துறையால் அறிவிக்கப்பட்டது. ஆனால் இன்று +2 தேர்வு முடிவுகள் வெளியாவதால் இன்று நடைபெறவிருந்த மின் தடை ஒத்திவைக்கப்படுகிறது.