சென்னையில் மிக்ஜாம் புயல் காரணமாக பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு கோவை மாநகர கமிஷனர் அலுவலகம் சார்பில்  மாநகர போலீசார்  உதவியுடன் அரிசி, பருப்பு, தண்ணீர் பாட்டில்கள், பண் பிரட் பிஸ்கட் பேண்ட் சட்டை ஸ்வட்டர் பெண்களுக்கான ஆடைகள் சோப் டூத் பேஸ்ட் மற்றும் நாப்கின் உட்பட அத்தியாவசியமான பொருட்கள் சேகரிக்கப்பட்டு லாரி மூலம் அனுப்பப்பட்டது. இவற்றின் மதிப்பு ரூ 5,74,037 ஆகும்.

இதனைத் தொடர்ந்து  பொருட்கள் அனைத்தும் லாரிகளில் ஏற்றப்பட்டு சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.இந்த நிவாரண பொருட்கள் அனைத்தையும் கோவை மாநகர கமிஷனர்  பாலகிருஷ்ணன் அவர்களின் அறிவுரைப்படி தயார் செய்யப்பட்டு இன்று சென்னைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. 

லரி மூலம் அனுப்பப்படுகின்ற பொருட்களை கோவை மாநகர கமிஷனர் பாலகிருஷ்ணன் கொடி அசைத்து துவக்கி வைத்தார் இவர்களுடன் போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

 ரூ. 2 லட்சம் மதிப்புள்ள உடைகள், ரூ. 1 லட்சம் மதிப்புள்ள உணவுப் பொருட்களும், ரூ 79 ஆயிரம் மதிப்புள்ள தண்ணீர் பாட்டில்களும், ரூ. 61 ஆயிரம் மதிப்புள்ள அத்தியாவசிய பொருட்களும் மொத்தமாக ரூ 5 லட்சத்து 74 ஆயிரம் மதிப்புள்ள வெள்ள நிவாரண பொருட்கள் அனுப்பப்படுகிறது.