கோவை ஆவாரம்பாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் நிர்வாகவியல் துறை மாணவிகளுக்கான 'மார்கஸ் திருவிழா' கொண்டாடப்பட்டது.

கல்லூரி முதல்வர் கி.சித்ரா தலைமை வகித்தார். இந்த நிகழ்வில் SME கிச்சன் எக்யுப்மெண்ட்ஸ் நிறுவனத்தின் நிர்வாக அதிகாரி சுபின் சுதாகரன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தார்.

துறைத்தலைவர் டி.ஜெயந்தி நிர்வாகவியல் துறைப் பேராசிரியர்கள் மற்றும் மாணவிகளின் சாதனைகளை அறிக்கை மூலமாக பகிர்ந்தார்.

இந்த நிகழ்வில் நிர்வாகவியல் துறையில் கடந்தாண்டு சாதனை படைத்த மாணவிகள் பாராட்டப்பட்டனர். விருதுகள், பாராட்டுகள், பல்வேறு போட்டிகள் எனக் கோலாகலமாக இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.