கந்த சஷ்டி மற்றும் சூரசம்ஹாரத்தை முன்னிட்டு வரும் 27.10.25 மற்றும் 28.10.2025 ( திங்கள், செவ்வாய்) கோவை மருதமலை மலைப்பாதையில் 2 மற்றும் 4 சக்கர வாகனங்களில் பக்தர்கள் செல்ல அனுமதி இல்லை. இந்த நாட்களில் பக்தர்கள் கோயில் பேருந்துகள் மூலமாகவோ அல்லது மலைப்படிகள் மூலமாகவோ மலைக்கோயிலுக்கு செல்லலாம் என கோயில் துணை ஆணையர் செந்தில்குமார் அறிவித்துள்ளார்.