கோவை மாநகரில் எரியாத தெருவிளக்குகளை உடனே சரிசெய்ய ஆணையர் உத்தரவு
- by David
- Jul 02,2025
கோவை மாநகரின் பல இடங்களில் தெருவிளக்குகள் பழுதானால் அவை அப்படியே கண்டுகொள்ளாமல் மாத கணக்கில் விடப்படுகிறதை மக்கள் பலரும் பார்த்து வருகின்றனர்.
இந்த குறைகள் அரசு உயர் அதிகாரிகள் கண்களில் படாதா, இதற்கு தீர்வு கிடைக்காதா என மக்கள் எதிர்பார்த்து வரும் நிலையில், கோவை மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் செவ்வாய்க்கிழமை இரவு நேரத்தில் மாநகரின் வடகோவை, பவர் ஹவுஸ், 100 அடி சாலை, புலியகுளம், லக்ஷ்மி மில்ஸ் போன்ற இடங்களிலும், அதை தொடர்ந்து இன்னும் கூடுதலாக சில இடங்களுக்கு ஆய்வுக்கு நேரே சென்றுள்ளார்.
எங்கெல்லாம் தெரு விளக்குகள் பழுதடைந்து உள்ளதோ, அங்கெல்லாம் நடவடிக்கை உடனே எடுக்கப்பட்டு, அவை சரிசெய்ய பட வேண்டும் என அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.
ஆணையர் நேரடியாக இந்த ஆய்வை மேற்கொண்டு உள்ளதால், மாநகரில் தெரு விளக்கு தொடர்பான பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும் என நம்பலாம்.