10 ஆம் வகுப்பு ,+1,+2 வகுப்பு பொது தேர்வு அட்டவணை நாளை வெளியாகும் என தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளாா்.

 

இது குறித்து அவா் டுவிட்டர்/ X தளத்தில் கூறியுள்ளது:-

 

மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் மற்றும் மாண்புமிகு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் வழங்கிய ஆலோசனையின்படி, வரும் திங்கள்கிழமை(14.10.2024) அன்று இந்தக் கல்வி ஆண்டிற்கான 10, 11, 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணையை வெளியிட உள்ளோம்.

 

இவ்வாறு அவர் கூறியிருந்தார். 

 

அமைச்சர் அன்பில் மகேஷ் நாளை காலை 10.00மணிக்கு கோவை சூலூர் பகுதியில் அமைந்துள்ள பள்ளபாளையம் அரசு துவக்க பள்ளியில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார் என்பதால் இந்த அட்டவணைகள் கோவையில் வெளியிட வாய்ப்புள்ளதாக கருத்துக்கள் உள்ளது.