கோவை உட்பட தமிழகத்தின் 24 மாவட்டங்களில் பள்ளி மாணவர்களுக்கு விஜயின் தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.) சார்பில் பரிசு வழங்கப்பட உள்ளது.

அரசியல் கட்சியைத் தொடங்கியுள்ள நடிகர் விஜய், முன்னதாகவே சமூக நலப்பணிகளை மேற்கொண்டு வந்தார். கடந்தாண்டு சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி கவுரவித்தார் விஜய்.

இதனிடையே இந்தாண்டும் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க த.வெ.க., சார்பில் முடிவு செய்யப்பட்டது. அதன்படி, 10 மற்றும் 12ம் வகுப்பில் நல்ல மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நடத்த த.வெ.க., முடிவு செய்துள்ளது.

முதற்கட்டமாக ஜூன் 28ல் கோவை, ஈரோடு, மதுரை, உள்ளிட்ட 21 மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சி சென்னை திருவான்மியூரில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் கட்ட நிகழ்ச்சியை ஜூலை மாதம் நடத்தத் திட்டமிட்டிருப்பதாக த.வெ.க., வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

2026ம் ஆண்டு அரசியலில் களமிறங்கப்போவதாக விஜய அறிவித்துள்ள நிலையில் இந்த பாராட்டு விழா அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.