கோவை மாநகரில் நேற்று வரை காலை நேரங்களிலும் நிலவிய வெயில் சூழல் இன்று குறைந்து, பல இடங்களில் மேகமூட்டம் நிறைந்த சூழல் காணப்படுகிறது. இதனால் இன்று மழைக்கான சூழல் இருக்குமா என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே உள்ளது.

இதுகுறித்து கோவையை சேர்ந்த வானிலை ஆய்வாளர் சந்தோஷ் கிருஷ்ணன் கூறியதாவது:-

தமிழகத்தின் கோவை உள்ளிட்ட மேற்கு மண்டல மாவட்டங்களின் பல்வேரு பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அடுத்த 5 நாட்களுக்கு மழை சூழல் இப்படி நீடிக்க சாத்தியம் உள்ளது. கோவை மாநகரத்தை பொறுத்தவரை, மதியத்தில் இருந்து இரவு நேரம் வரை மிதமானது முதல் கனமழை பெய்ய வாய்ப்புகள் உள்ளது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.