வரும் நாட்களில் கோவையில் மழைக்கு வாய்ப்பு உள்ளதா? வந்தாச்சு வெதர் மேனின் அப்டேட்
- by CC Web Desk
- May 12,2025
கோவை மாநகரில் புதன்கிழமைக்குப் பிறகு ஒரு சில நாட்கள் ஆங்காங்கே மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என கோவை வெதர் மேன் சந்தோஷ் கிருஷ்ணன் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது :-
இன்று (12.5.25) ஆரம்பிக்கும் வெப்ப சலன மழை மேற்கு மண்டலத்தில் வடக்கு மற்றும் கிழக்கு கொங்கு மண்டலத்தில் அடுத்த ஐந்து நாட்களுக்கு ஆங்காங்கே பதிவாகும். மே 16ஆம் தேதிக்கு பிறகு மழையின் பரப்பளவு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
கோயம்புத்தூர் மாநகரத்தை பொறுத்தவரை, வடக்கு கோயம்புத்தூரில் வரும் நாட்களில் நல்ல மழைக்கு வாய்ப்புள்ளது. மாநகரில் புதன்கிழமைக்குப் பிறகு ஒரு சில நாட்கள் ஆங்காங்கே மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. தென்மேற்கு திசை காற்று வரும் நாட்களில் அதிகரிக்க கூடும் என்பதால் வெப்பத்தின் தாக்கமும் மாலை இரவு நேரங்களில் மேற்கு மண்டலத்தில் குறைவாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.