கோவை மாநகராட்சி மேட்டுப்பாளையம் ரோட்டில் சாய்பாபா காலனி மற்றும் கவுண்டம்பாளையம் எல்லையில் மாநகராட்சி பேருந்து நிலையம் இயங்கி வருகிறது. 

 

இந்த பேருந்து நிலையத்திலிருந்து மேட்டுப்பாளையம் ஊட்டி மற்றும் வெளி மாநில பேருந்துகள் பெரும்பாலும் இயங்கி வருகின்றன.

 

30 ஆண்டுகளுக்கு முன் இந்த பேருந்து நிலையம் அமைக்கப்பட்ட போது, அதற்கு 3.5 ஏக்கர் இடம், இஸ்லாமிய சமுதாயத்தினரால் வழங்கப்பட்டது. அதற்கு பதிலாக கவுண்டம்பாளையத்தில் 2 ஏக்கர் இடம் அவர்களுக்கு இஸ்லாமிய மயானம் அமைக்க அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்டு  அரசாணையும் பிறப்பிக்கப்பட்டது. 

 

ஆனால் ஒதுக்கீடு செய்யப்பட்ட இடத்திற்கு அணுகுபாதை பிரச்சனை என பல்வேறு காரணங்களை சொல்லி கடந்த 25 ஆண்டுகளாக தீர்வு காணப்படாமல் இருந்த இடத்தை புதிய ஆணையாளர் கடந்த வெள்ளிக்கிழமை நேரில் பார்வையிட்டு, சனிக்கிழமை பாதை திறக்கப்பட வேண்டுமென்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

 

தற்போது (சனிக்கிழமை தகவல் படி) அந்த பாதை திறப்பதற்கு முன் செய்ய வேண்டிய சிறு பணிகள் நடைபெற்று வருகிறது

மிக விரைவில் இந்த பணிகள் முடிக்கப்பட்டு அனுகுபாதை திறக்கப்படும். 

 

இதனால் இஸ்லாமிய சமுதாய மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். புதிய மாநகராட்சி ஆணையாளர் ம.சிவகுரு பிரபாகரனுக்கு தங்களது நன்றியை தெரிவித்தனர்.