கோவை தொண்டாமுத்தூர் பரமேஸ்வரன்பாளையம், வெங்கடேசப் பெருமாள் கோயிலுக்கு சொந்தமான ரூ. 25 கோடி மதிப்பிலான சுமார் 24.7 ஏக்கர் நிலத்தை இந்து சமய அறநிலைய துறை மீட்டு உள்ளது. 

 

கோவை, பேரூர் வட்டம் தேவராயபுரம் கிராமத்தில் இந்த நிலம் மீட்கப்பட்டுள்ளது. 

 

கோவில்களுக்கு சொந்தமான நிலங்களை இந்து சமய அறநிலைய துறையும் மாநகராட்சிக்கு சொந்தமான ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களை கோவை மாநகராட்சியும் மீட்டு வருகின்றன. 

 

 கடந்த ஒரு ஆண்டில் கோவை மாநகராட்சிக்கு சொந்தமான ரூ.247.70 கோடி மதிப்பிலான பல ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்கப்பட்ட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.