முன்னாள் அதிமுக அமைச்சர் செங்கோட்டையன் நேற்று தன்னுடைய மன நிம்மதிக்காக உத்திரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஹரித்வார் செல்வதாக கூறி, கோவை விமான நிலையத்தில் இருந்து செய்தியாளர்களை சந்தித்து விட்டு சென்றார்.

நேற்று இரவு 9 மணி அளவில் அவர் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அவரின் டில்லி வீட்டில் சந்தித்துள்ளார். இந்த நிலையில் அவர் தனது பயணத்தை முடித்துவிட்டு இன்று கோவை திரும்பினார்.

அங்கு அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தான் உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரை சந்தித்தாக கூறினார்.

இந்த சந்திப்பின் போது தற்போதைய அரசியல் சூழ்நிலை பற்றி கருத்துகள் பரிமாறப்பட்டதாகவும், எல்லோரும் ஒன்றிணைய வேண்டும் என்ற நோக்கத்தோடும், இயக்கம் வலிமை பெறவேண்டும் என்ற நோக்கத்தோடும் கருத்துகளை அவர்களிடம் எடுத்து சொன்னதாக அவர் கூறினார்.