கடுமையான வெப்பத்துக்கு நடுவே இன்று (15.5.25) அடுத்த சில மணி நேரங்களில் கோவை மாநகரின் பல பகுதிகளில் நல்ல மழை பெய்ய வாய்ப்புள்ளதாக பார்க்கப்படுகிறது.

தற்போது கோவை மாநகரின் பல இடங்களில் வானம் மழை மேகங்கள் சூழ்ந்துள்ளன.நேற்று மாலை நேரத்தில் மழை 2 மணி நேரம் பெய்த நிலையில் இன்றும் அப்படி பெய்வதற்கான சூழல் நிலவுகிறது.

சென்னை வானிலை ஆய்வு மையம் தற்போது வெளியிட்டுள்ள கோவைக்கான வானிலை ஆய்வு அறிக்கையில், இன்று திங்கள் (19.5.25) வரை கோவை மாவட்டத்தில் வானம் மேகமூட்டத்துடனும், லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடிய வானிலை சூழல் நிலவும் என குறிப்பிடப்பட்டுள்ளது.