மதுரை மற்றும் கோவை ஆகிய இரு மாநகரங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள மெட்ரோ ரயில் திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கையை இந்த திட்டத்தை முன்னெடுக்கும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தமிழக அரசிடம் சமர்ப்பித்துள்ளது.
இந்தத் திட்ட அறிக்கைகளை தமிழக அரசு மத்திய அரசிற்கு அனுப்பி வைத்துள்ளது. மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் மற்றும் பொருளாதார விவகாரங்கள் துறை முன்பு இந்த திட்டங்களினுடைய அம்சங்கள் குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் அதிகாரிகள் விவரிக்க உள்ளது.
அதை தொடர்ந்து, இந்த திட்டம் மத்திய அரசின் பொது முதலீட்டு வாரியம் முன்பு வைக்கப்படும். அதன் பின்னர் மத்திய அரசின் ஒப்புதல் பெற அரசிடம் அனுப்பப்படும். என தகவல் வெளியாகி இருக்கிறது.
இனி கோவை மெட்ரோ ரயில் திட்டம் வேகமெடுக்கும் என எதிர்பார்க்கலாம்!
- by David
- Nov 25,2024