கோவை மதுக்கரை சாலையிலிருந்து பொள்ளாச்சி சாலையை அணுக சுந்தரபுரம் சிக்னல் சென்று அங்கிருந்து பயணிக்க வேண்டியுள்ளது. அதுவே மதுக்கரை சாலைக்கு அருகில் அமைந்துள்ள சிட்கோ சாலையை பயன்படுத்தி சென்றால் இவ்வாறு சுற்றி செல்லவேண்டிய நிலைமை இருக்காது.

ஆனால் இங்கு தான் ஒரு சிக்கல். சிட்கோ சாலைக்கும் மதுக்கரை சாலைக்கும் இடையே இணைப்பு என்பது இதுவரை ஏற்படுத்தப்படாமல் உள்ளது.

இதனால் தற்போது சுந்தராபுரம் சிக்னல் வரை சென்று தான் வரவேண்டிய நிலைமை உள்ளது. இதனால் சுந்தரபுரம் சிக்னல் வழியே போக்குவரத்து கடுமையாக இருக்கும் நிலை உள்ளது.

இந்நிலையில் சிட்கோ சாலை மற்றும் மதுக்கரை சாலையை இணைக்க சிறுபாலம் அமைக்கலாம் என கோவை மாநகராட்சி தரப்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான டெண்டர் பணிகளுக்கு பின்னர் வேகமாக அந்த பாலம் கட்டப்படும் என தெரியவருகிறது.