கோடைகாலத்தில் சுற்றுலா பகுதிகள் அதிகம் கொண்ட நீலகிரி மாவட்டத்திற்கும் கொடைக்கானல் மலைப்பகுதியை உடைய திண்டுக்கல் மாவட்டத்திற்கும் பிற மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்களின் அளவை கட்டுக்குள் வைக்க இ-பாஸ் நடைமுறை சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் அமல்படுத்தப்படுகிறது. 

ஒரே நேரத்தில் மலை பகுதிகளுக்கு அதிக அளவில் வாகனங்கள் சென்றால் உள்ளூர் மக்களின் வழக்கமான நடமாட்டம் பாதிக்கப்படும், சுற்றுச்சூழலுக்கும், விலங்குகளுக்கும் கூட பாதிப்[பு ஏற்பட வாய்ப்புள்ளது என்பதால் இப்படி ஒரு நடைமுறை அமல்படுத்தப்பட்டது. அந்த வகையில், கோவை மாவட்டம் வால்பாறையிலும் இந்த இ-பாஸ் நடைமுறையை அமல்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

நவம்பர் 2025 முதல் இது அமல் படுத்தப்படும் என தெரியவருகிறது. https://epass.tnega.org/ என்ற முகவரியில் பிரமாநிலத்தை சேர்ந்தவர்கள் வால்பாறைக்குள் வாகனங்களில் வரும்போது முறையாக பதிவு செய்த பின்னர் தான் வரமுடியும்.