கோவை மாநகரில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க மேற்கு புறவழி சாலை திட்டம் ஆகஸ்ட் 2023ல் துவங்கியது. மொத்தம் 32.4 கி.மீ. நீளம் கொண்ட இந்த புறவழிச்சாலை 3 பகுதிகளாக அமைக்கப்படுகிறது.

மதுக்கரை முதல் மாதம்பட்டி வரை முதல் பகுதி (11.80 கி.மீ), மாதம்பட்டி முதல் கணுவாய் முதல் இரண்டாம் பகுதி (12.10 கி.மீ), கணுவாய் முதல் நரசிம்மநாயக்கன்பாளையம் வரை மூன்றாம் பகுதி (8.52 கி.மீ) ஆக பிரிக்கப்பட்டு உள்ளது. 

முதல் பகுதி ரூ.250 கோடி மதிப்பில் நடைபெற்றுவருகிறது. மொத்தம் 11.80 கி.மீ நீளத்திற்கு சாலை அமைக்கவேண்டிய இடத்தில் இன்னும் 2 கிலோமீட்டருக்கு தான் உள்ளது. 
மேலும் இப்பகுதியில் அமைகிற மாதம்பட்டி சந்திப்பு மேம்பால பணிகள் நிறைவேறியுள்ளது. அதே சமயம் மைக்கல் பகுதியில் அமைகிற மேம்பாலம் 40% நிறைவேறி உள்ளது. 
கட்டுமான பொருட்கள் விலை உயர்வு, மேம்பாலம் அமையும் மைக்கல் பகுதியில் நிலம் கையகப்படுத்துதலில் தாமதம், நிலத்தடியில் உள்ள குழாய்கள், வயர்களை வேறு இடத்திற்கு மாற்றுதல் மற்றும் சில எதிர்பாரா சவால்களால் இந்த முதல் பகுதி தாமதம் ஆக காரணங்களாக பார்க்கப்படுகிறது. முதல் கட்ட பணிகள் மொத்தம் 90% நிறைவடைந்துள்ளது.

செப்டம்பர் 2025ல் முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட இந்த முதல் பகுதியின் பிரதான சாலையை நவம்பரில் முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரவும், மேம்பாலம் உள்ளிட்ட முழு முதல் கட்ட பணிகளை 2025 டிசம்பருக்குள் முடிக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். 

முதல் கட்ட பணிகள் நிறைவேறிய பின்னர் தான் மாதம்பட்டி முதல் கணுவாய் முதல் வரும் இரண்டாம்  பணிகள் துவங்கும். ஆனால் இந்த திட்டத்திற்கு தேவையான நிலம் 90%க்கும் மேல் கையகப்படுத்தப்பட்டுவிட்டது.