கொங்குநாடு கல்லூரியில் பண்டைய தமிழர்களின் கடல்சார் வணிகம் பற்றிய கருத்தரங்கு
- by admin
- Sep 25,2025
கோயம்புத்தூர், கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறை (சுயநிதிப்பிரிவு) வணிகவியல் துறை இணைந்து "பண்டைய தமிழர்களின் கடல்சார் வணிகமும் பண்பாட்டு வெளிப்பாடுகளும்: ஒரு வரலாற்றுப் பார்வை" என்ற தலைப்பில் தேசிய அளவிலான ஒரு நாள் கருத்தரங்கத்தினை நடத்தினர்.
இந்தக் கருத்தரங்கத்தில் சென்னை பச்சையப்பா கல்லூரி வரலாற்றுத் துறை முதுகலை மற்றும் ஆய்வுத்துறை, உதவிப் பேராசிரியர் முனைவர் R.சரவணன், கடல்சார் வணிக வலையமைப்பும் வெளிநாட்டு தொடர்புகளும் என்ற தலைப்பில் பேசினார்.
இராணிப்பேட்டை மாவட்டம் சி அப்துல் ஹக்கீம் கல்லூரி வரலாற்றுத் துறை முதுகலை மற்றும் ஆய்வியல்துறை உதவிப்பேராசிரியர் முனைவர் குமரன், கடல்சார் வணிகத்தின் பண்பாட்டு தாக்கம் என்ற தலைப்பில் பேசினார்.
பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தின் உதவிப்பேராசிரியரும் ஆராய்ச்சியாளருமான முனைவர் எஸ். எம். நாகேஸ்வரி, வரலாற்றுத் தொடர்ச்சியும் பூர்வீக வணிக முறைகளும் என்ற தலைப்பில் பேசினார்.
இந்நிகழ்விற்கு வணிகவியல் துறையின் இணைப் பேராசிரியரும் முனைவர் உமாமகேஸ்வரி வரவேற்புரை வழங்கினார். இந்நிகழ்வில் வணிகவியல் துறையின் தலைவரும் ஒருங்கிணைப்பாளருமான முனைவர் எஸ். உமா கல்லூரியில் வணிகவியல் புலத்தில் ஒருங்கிணைப்பாளரான முனைவர் டி குமார் விருந்தினர்களுக்குச் சிறப்பு செய்தனர். நிகழ்வின் இறுதியாக தமிழ்த்துறை (சுயநிதிப்பிரிவு) தலைவரும் நிகழ்வின் ஒருங்கிணைப்பாளருமான முனைவர் அ.இராஜலட்சுமி நன்றியுரை வழங்கினார்.