கோவையில் மீன்கள் விலை குறைந்தது!
- by David
- Nov 20,2023
Coimbatore
கோவை உக்கடம் பகுதியில் உள்ள 2 மீன் சந்தைகளில் மீன்கள் விற்பனை விலை தற்போது குறைந்து வருகிறது.
இங்கு அக்டோபர் மாதத்தில் ரூ.900க்கு விற்பனையான ஒரு கிலோ வஞ்சிரம் தற்போது ரூ.700க்கு விற்பனை ஆகிறது. அதேபோல, ரூ.600க்கு விற்பனை ஆன வெள்ளை வாவல் ரூ.500க்கும், ரூ.400க்கு விற்பனையான கருப்பு வாவல் ரூ.300க்கும் விற்பனையாகின்றன. பாறை மீன் கிலோ ரூ.200க்கும், ஊழி ரூ.100க்கும், மத்தி ரூ.100க்கும், நெத்திலி ரூ.150க்கும், சங்கரா ரூ.180க்கும், செம்மீன் ரூ.300க்கும் விற்பனை ஆகிறது.
தற்போது கார்த்திகை மாதம் என்பதால் மக்கள் பலரும் சபரிமலைக்கு மாலை அணிந்து விரதம் கடைபிடிக்க துவங்கி உள்ளதால் விலை இவ்வாறு குறைந்து உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.