கோனியம்மன் திருக்கோயில் தேர்த் திருவிழாவை முன்னிட்டு நிகழ்வு நடைபெறும் இடங்களுக்கு அருகே உள்ள பகுதிகளில் அமைந்துள்ள 24 பள்ளிகளுக்கு  05.03.2025 அன்று ஒரு நாள் விடுமுறை வழங்கப்படுவதாக கோவை மாவட்ட கலெக்டர் அறிவிதுள்ளார்.

அதேசமயம் 11ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு நாளை காலை வழக்கம்போல் நடைபெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

விடுமுறை வழங்கப்படும் பள்ளிகள்:

1. CCMA மகளிர் மேல்நிலைப் பள்ளி - இராஜவீதி, 2. வீராசாமி முதலியார் உயர்நிலைப்பள்ளி - இராஜவீதி, 3. புனித மைக்கேல்ஸ் மேல்நிலைப் பள்ளி- இராஜவீதி,4. சௌடேஸ்வரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி. 5. SBOA மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, 6. புனித ஃப்ரான்ஸிஸ் மகளிர் உயர்நிலைப் பள்ளி, 7. புனித ஜொசப் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, 8. புனித மெரீஸ் மேல்நிலைப் பள்ளி, 9. புனித மைக்கேல்ஸ் மெட்ரிக் உயர்நிலைப் பள்ளி, 10. மில்டன் மெட்ரிக் பள்ளி, 11. ஷ்ருஸ்டி வித்யாலயா, 12. வாசவி வித்யாலயா, 13. மதர்லாண்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, 14. T.E.LC நடுநிலைப் பள்ளி, 15. ICC நடுநிலைப் பள்ளி, 16. நல்லாயன் தொடக்கப் பள்ளி, 17. மாநகராட்சி மகளிர் மேல்நிலைப் பள்ளி - ஒப்பனக்காரர் வீதி, 18. ஆர்.கே.ஸ்ரீ ரங்கம்மாள் மேல்நிலைப் பள்ளி, 19. மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி கோவை நகரம் VH ரோடு, 20. CSI ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, 21. மன்பல் உலும் தொடக்கப் பள்ளி, 22.மன்பல் உலும் மேல்நிலைப் பள்ளி, 23,பிரசென்டேசன் கான்வென்ட் மகளிர் மேல்நிலைப் பள்ளி மற்றும் 24.மாரன்னகவுண்டர் உயர்நிலைப் பள்ளி.