கோவை எஸ்.என்.ஆர்.சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் ஆர்.சுந்தருக்கு 'கல்வி மாற்றத்திற்கான முன்னோடி விருது'
- by CC Web Desk
- Jun 30,2025
கல்வி மற்றும் தொழில்துறையின் எதிர்கால வளர்ச்சியை மையமாகக் கொண்டு நடத்தப்படும் இந்தியாவின் குறிப்பிடத்தக்க மாநாடுகளில் ஒன்றான ஐ.சி.டி. அகாடமியின் பிரிஜ் 2025 மாநாட்டில், கோவையில் இயங்கும் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்கள் மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையை நடத்தும் எஸ்.என்.ஆர்.சன்ஸ் சாரிடபிள் டிரஸ்ட் நிறுவனத்தின் நிர்வாகஅறங்காவலர் ஆர். சுந்தருக்கு 'கல்விமாற்றத்திற்கான முன்னோடி' எனும் விருது வழங்கப்பட்டது.
சென்னையில் நடைபெற்ற இந்த நிகழ்வு தமிழ்நாடு அரசின் தகவல் தொழில்நுட்பம் மற்றும்டி ஜிட்டல் சேவைகள் துறையின் முழு ஆதரவுடன் நடத்தப்பட்டது.
இந்த விருது, ஆர். சுந்தரின் கல்வி மற்றும் சுகாதாரத்துறைகளில் நிகழ்த்திய முன்னோடியான பங்களிப்புக்காகவும், மாணவர்களையும் கல்வி நிறுவனங்களையும் புதுமை, தொழில்நுட்பம் மற்றும் தரத்துடன் சிறப்படைய செயல்பட்டதற்காகவும் வழங்கப்பட்டது.
இதை தமிழக அரசின் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வழங்கினார்.