கோவை உள்பட 15 மாவட்டங்களுக்கு இன்று வெப்ப அலைக்கான ஆரெஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே கடும் வெப்பம் நிலவி வரும் நிலையில், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, தருமபுரி, கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், ஈரோடு, கோவை, கரூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர் ஆகிய 15 மாவட்டங்களுக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதற்கு அடுத்து நாளை (7.5.24) நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருபத்தூர் ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது எனவும் நாளை மறுநாள் (8.5.24)  நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, நெல்லை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது.