தமிழகத்தில் பல மாவட்டங்களில் கோடை மழை பெய்து வருகிறது. இந்த தொடர் மழை காரணமாக மழையின் தீவிரத்திற்கு ஏற்ப சென்னை வானிலை ஆய்வு மையம் மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுத்து உள்ளது.

நீலகிரி மாவட்டத்துக்கு மே 18, 19, 20 ஆகிய 3 நாட்கள் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதை அடுத்து நீலகிரி ஆட்சியர் அலுவலகத்தில் மழைக்கால முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய கலெக்டர் அருணா, ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கான முன்னேற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும் ஊட்டிக்கு 18-20 ஆம் தேதி வரை சுற்றுலாவுக்கு மக்கள் வர வேண்டாம், வருவதை தவிர்க்க வேண்டும் என கேட்டுகொண்டார்.