தமிழகத்தில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை வழங்கப்பட்டு, விடுமுறை காலம் நிகழ்ந்து வருகிறது. இந்நிலையில் பள்ளிகள் திறப்பு குறித்த முக்கிய தகவல் இன்று வெளியானது.

ஜூன் மாதத்தின் முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்கப்படுமா அல்லது இரண்டாவது வாரத்தில் திறக்கப்பட வாய்ப்புள்ளதா என்று பெற்றோர்கள் எதிர்பார்த்து வரும் நிலையில், மே மாதம் 25 ஆம் தேதிக்கு பின்னர்  பள்ளி கல்வி துறை அதிகாரிகள் ஆலோசித்து, கோடை கால வானிலையை கருத்தில் கொண்டு அப்போதைய நிலைமையை பொறுத்து பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு எடுப்பார்கள் என தெரியவருகிறது.

ஜூன் 4ல் (செவ்வாய்) பாராளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவுகள் வெளியாகும் என்பதால் வியாழன்/ ஜூன் 6ல் பள்ளிகள் திறக்க வாய்ப்பு உள்ளதாக பார்க்கப்பட்டாலும்,  மே மாத இறுதியில் பள்ளிகல்வி துறை தரப்பில் ஆலோசனை நடத்தி திறப்பு தேதி அறிவிக்கப்படும் என தகவல்கள் கூறுகின்றன.