வன மகோத்சவத்தை முன்னிட்டு 'காவேரி கூக்குரல்' சார்பில் கோவைப்புதூர் பகுதியில் மரங்கள் நடவு
- by David
- Jul 09,2025
ஈஷாவின் 'காவேரி கூக்குரல்' இயக்கம் சார்பில் ஜூலை 7ம் தேதி பசுமை திருவிழாவான 'வன மஹோத்சவம்' கடைபிடிக்கப்படுகிறது. இந்நாளில் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மரங்கள் நடவு செய்யப்பட்டன.
கோவை மாநகரில் வன மகோத்சவம் நிகழ்வின் ஒரு பகுதியாக, கோவைப்புதூர் பகுதியில் உள்ள சுகாதார ஆய்வாளர் அலுவலக வளாகத்தை சுற்றியும் அரச மரங்கள் உள்ளிட்ட நாட்டு மர வகைகள் நடப்பட்டது. இந்த நிகழ்விற்கு வார்டு எண் 90ன் சுகாதார பணிகள் மேற்பார்வையாளர் மற்றும் தூய்மை பணியாளர்கள் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர்.
கோவைப்புதூர் பகுதியை பசுமையாக தொடரச்செய்யவும், சுத்தமான காற்று, நிழல் அனைத்து உயிர்களுக்கும் கிடைக்கவும் இந்த பணிகள் நடைபெற்றது. மேலும் இப்பணிகள் மூலம் மக்களுக்கு சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், மரம் வளர்க்கும் பழக்கத்தை ஊக்குவிக்கவும் முடியும் என கருதப்படுகிறது.
ஈஷா மூலம் கடந்த 25 ஆண்டுகளாக விவசாய நிலங்களில் 12.1 கோடி மரங்கள் நடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு (2024 – 25) தமிழகத்தில் 1.21 கோடி மரக்கன்றுகள் விவசாய நிலங்களில் நடப்பட்டுள்ளது. நடப்பாண்டில் (2025 - 2026) தமிழகத்தில் 1.20 கோடி மரக்கன்றுகள் நட இலக்கு நிர்ணயித்து தற்போது வரை 22,55,000 மரங்கள் நடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.