கோவை சிறுமுகை அருகே, பெள்ளேபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பட்டக்காரனூர் கிராமத்தில் உள்ள ஒரு மழைநீர் தடுப்பனை குட்டையில் முதலை நடமாட்டம் இருப்பதாக தகவல் வனத்துறையினருக்கு வீடியோ ஆதாரங்களுடன் தெரிவிக்கப்பட்ட நிலையில் அந்த முதலையை பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.

இதற்காக மேட்டுப்பாளையம் வனத்துறை அதிகாரிகள் முதலை நடமாட்டம் உள்ள தடுப்பனை குட்டையை நேரில் ஆய்வு செய்து, அதன் கால் தடங்களை சேகரித்துனர். மேலும் குட்டையில் உள்ள தண்ணீரை வெளியேற்றி அதன் பின்னர் முதலையை விரைவாக பிடிக்க திட்டமிடப்பட்ட நிலையில் தற்போது அதுபற்றிய புது தகவல் வெளிவந்துள்ளது.

தடுப்பணை குட்டையில் சுமார் 8 அடி ஆழத்தில் முதலை பதுங்கியிருப்பதாகவும், அதை பிடிக்க வனத்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரியவருகிறது. குட்டையை சுற்றி நைலான் வலைகளை கட்டியதோடு குட்டை தண்ணீரை ராட்சத மோட்டாரைக் கொண்டு வெளியேற்றி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.