2019ல் பொள்ளாச்சியில் ஒரு கும்பல் பல பெண்களை பாலியல் துன்புறுத்தல் செய்து வீடியோ பதிவு செய்து பணம்பறிப்பு மற்றும் மிரட்டல் செய்து வந்தது வெளிவந்தது.

பாதிக்கப்பட்ட ஒரு பெண் கொடுத்த புகாரினால் போலீசார் இந்த கும்பலை பிடித்தனர். இந்த வழக்கில், சபரிராஜன், திருநாவுக்கரசு,வசந்தகுமார், சதீஷ், மணிவண்ணன், அருளானந்தம், ஹிரன்பால், பாபு, அருண்குமார் ஆகிய 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

2019 முதல் இப்போது வரை இந்த வழக்கு நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக சிபிஐ விசாரணையை மேற்கொண்டு வருகிறது. இதுவரை பல கைதுகள் செய்யப்பட்டிருந்தாலும், முழுமையான விசாரணை முடிந்து குற்றவாளிகளுக்கு தண்டனை எப்போது கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே நிலவுகிறது.

இந்நிலையில் இந்த பாலியல் குற்ற வழக்கில் விசாரணை நிறைவடைந்த நிலையில் தீர்ப்பு வழங்குவதாக நீதிபதி நந்தினி தேவி அறிவித்துள்ளார். கடந்த ஒரு மாதமாக வழக்கில் இரு தரப்புக்குமான விவாதம் நடைபெற்று வந்த நிலையில் வருகின்ற மே 13ஆம் தேதி வழக்கில் தீர்ப்பு வழங்க இருப்பதாக நீதிபதி அறிவித்துள்ளார்.

வழக்கில் கைது செய்யப்பட்ட நபர்கள் அனைவரும் தற்போது சேலம் மத்திய சிறையில் உள்ளனர்.