கோவை கலெக்டராக விடைபெற்று மாவட்ட கண்காணிப்பு அலுவலராக மீண்டும் வந்து வளர்ச்சித்திட்டப் பணிகளை ஆய்வு செய்தார் கிராந்தி குமார் ஐ.ஏ.எஸ்.
- by David
- Apr 28,2025
கோவை கலெக்டராக விடைபெற்று மாவட்ட கண்காணிப்பு அலுவலராக மீண்டும் வந்து வளர்ச்சித்திட்டப் பணிகளை ஆய்வு செய்தார் கிராந்தி குமார் ஐ.ஏ.எஸ்.
கோவை மாவட்டத்தின் 183வது கலெக்டராக 2023ல் இருந்து 2025 பிப்ரவரி வரை செயல்பட்ட கிராந்தி குமார் ஐ.ஏ.எஸ்., தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழக நிர்வாக இயக்குநர் பணிபுரிந்து வருகிறார்.
மாவட்ட கண்காணிப்பு அலுவலராக உள்ள அவர், இன்று கோயம்புத்தூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித்திட்டப் பணிகளை மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் முன்னிலையில், இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.செம்மொழிப்பூங்கா கட்டுமானப்பணிகள், தந்தை பெரியார் நூலகத்தின் கட்டுமானப் பணிகள், அவிநாசி சாலை கோல்டு வின்ஸ் முதல் உப்பிலிபாளையம் வரை10.10 கி.மீட்டர் நீளத்திற்கு மேம்பாலம் அமைக்கும் பணி குறிச்சி குனியமுத்தூர் குடிநீர் திட்டம் மற்றும் பாதாள சாக்கடை திட்டத்திற்கான குழாய் அமைக்கும் பணி ஆகிய வளர்ச்சித்திட்டப் பணிகளை அவர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு,வளர்ச்சித் திட்டப் பணிகளை விரைவாக மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
அதனைத் தொடர்ந்து, இராமநாதபுரம் கிருஷ்ணசாமி நகர் பகுதியில் 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் சார்பில் செயல்படும் குறுகிய கால திறன் பயிற்சி மையத்தின் செயல்பாடுகள் மற்றும் பயிற்சி மையத்தில் அளிக்கப்படும் பயிற்சிகள் குறித்தும் கேட்டறிந்தார்.
இதற்கடுத்து சாய்பாபா காலனி, பாலசுப்ரமணியம் சாலை பகுதியில் அமைந்துள்ள முதல்வர் மருந்தகத்தினையும் அவர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, மருந்தகத்தின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.
மருதமலை சாலையில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் செயல்படும் சிகரம் தொடு உள்ளிட்ட சிறப்பு பயிற்சி வகுப்பினையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு. மாணவர்களிடம் கலந்துரையாடினார்.