கோவை மாநகரில் இன்று பல இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது.

மாலை 3 மணி முதல் துடியலூர், சிவானந்தா காலனி, பீளமேடு, கணபதி, மசக்காளிபாளையம், போத்தனூர், சிங்காநல்லூர் காந்திபுரம், 100 அடி ரோடு ஆகிய பகுதிகளில் மழை பெய்துவருவதால், வெப்பம் தணிந்து காணப்படுகிறது.

பலநாட்களுக்கு பின்னர் கோவை மாநகரின் பல இடங்களில் மழை பெய்து வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அடுத்த ஒரு வாரம் கோவை உள்பட கொங்கு மண்டலத்தின் பல பகுதிகளில் மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பொழிவு இருக்கும் என கோவை வெதர் மேன் சந்தோஷ் தெரிவித்துள்ளார்