கோவையில் சாலை விபத்துக்கள் அடிக்கடி ஏற்படும் பகுதிகளில் முக்கியமான ஒன்றாக உள்ளது எல் & டி பைபாஸ் சாலை. 27.2 கிலோமீட்டர் நீளத்துக்கு நீலாம்பூர் முதல் மதுக்கரை வரை உள்ள இந்த சாலையில் 2022ல் 55 வாகன ஓட்டிகள் சாலைவிபத்துக்குள்ளாகி உயிரிழந்த நிலையில் 2023ல் இது 120 ஆக அதிகரித்து இருந்தது.

ஆயிரக்கணக்கான லாரிகள் தினமும் இந்த சாலை மூலமாக கேரளா, பெங்களூரு மற்றும் சென்னைக்கு செல்கின்றனர். இந்த சாலை குறுகலாக இருப்பதாலும், நடுவே டிவைடர் இல்லாததாலும் வாகனங்களில் வருவோர் முன்னர் செல்லும் வாகனங்களை முந்த முயல்கையில் விபத்துகள் நேர்வதாக கருதப்படுகிறது.

மாநில அரசோ அல்லது சாலைபோக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகமோ இதை 6 வழி சாலையாக விரிவாக்கம் செய்தால் தான் இந்த விபத்துக்கள் குறையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடந்த ஜனவரி மாதம் மாநில நெடுஞ்சாலை துறை சார்பில் இரண்டு வழி சாலையாக உள்ள எல் & டி பைபாஸ் சாலையை 6 வழி சாலையாக விரிவாக்கம் செய்ய சாலைபோக்குவரது மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகத்துக்கு பரிந்துரை கொண்ட அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

விரைவில் இது ஏற்கப்பட்டு இங்கு விரிவாக்கம் நடைபெறவேண்டும் என பலரும் எதிர்பார்த்து வரும் நிலையில் கோவை மாவட்டத்தில் மதுக்கரை நீலம்பூர் L &T  பைபாஸ் ரோடு விரிவாக்கம் செய்ய மாஸ்டர் பிளானில் திட்டம் வர போகிறது என்ற முக்கிய தகவல்களை கோவை சரக காவல்துறை சார்ந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.