ஆயுத பூஜை (அக்.1-புதன்), காந்தி ஜெயந்தி (அக்.2-வியாழன்) ஆகிய நாட்கள் அரசு விடுமுறை வழங்கப்பட்டுள்ள நிலையில், அக்.3 - வெள்ளி, பொது விடுமுறை என தமிழக அரசு அறிவித்ததாக இன்று மதியம் தகவல் வெளிவந்தது.

இந்த நிலையில் அக்.3ம் தேதி அரசு பொது விடுமுறை அல்ல என தமிழக அரசின் தகவல் சரிபார்ப்பகம் தரப்பில் இன்று இரவு 8:05 மணி அளவில் கூறப்பட்டுள்ளது.

ஒரு தகவலின் படி, 3ம் தேதி விடுமுறை என்ற கோரிக்கை பரிசீலனையில் உள்ளதாக கூறப்படுகிறது. 

மிகவும் நம்பகத்தன்மை கொண்ட தகவல்கள் அடிப்படையில் நமது செய்தி தளத்திலும் விடுமுறை என பதிவு செய்திருந்தோம். இந்த குழப்பத்திற்கு வருந்துகிறோம்.