டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் வழிகாட்டுதல் மையம் சார்பில் வரும் டிசம்பர் 2ம் தேதி ரெட்பீல்ட்ஸ் பகுதியில் உள்ள நிர்மலா மகளிர் கல்லூரி வளாகத்தில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. 

இந்த வேலைவாய்ப்பு முகாமில் ஜவுளித்துறை, கட்டுமானத்துறை, பொறியியல், தகவல் தொழில்நுட்பம், ஆட்டோமொபைல், மருத்துவம் போன்ற பல துறைகளில் இருந்து சுமார் 250 நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன.

இதில் 8ம் வகுப்பு, 10ம்  வகுப்பு 12ஆம் வகுப்பு, இளநிலை, முதுகலை, டிப்ளமோ, பொறியியல் பட்டதாரிகள் மற்றும் செவிலியர்கள் கலந்து கொள்ளலாம்.வேலைவாய்ப்பு தேடி வரும் நபர்கள் அனைவரும் தங்களுடைய முழு பயோடேட்டா மற்றும் கல்வித் தகுதி சான்றிதழ்களை கொண்டுவர வேண்டும். இதில் கலந்து கொள்ள வயது வரம்பு கிடையாது அனுமதி அனைவருக்கும் இலவசம்.

வேலை தேடுபவர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையத்தளத்திலும் https://bit.ly/kovaijobfair2023 என்ற பக்கத்திலும் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

இந்த முகாமில் தேர்ந்தெடுக்க படுபவர்களுக்கு அங்கே நியமன ஆணை வழங்கப்படும். 

இந்த முகாம் மூலமாக மொத்தம் 20,000 பணியிடங்களை நிரப்ப தனியார் நிறுவனங்கள்  ஆட்களை தேர்வு செய்ய உள்ளது.

மேலும் இது குறித்த தகவல்களுக்கு 94990-55937 என்ற எண்ணை காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை தொடர்பு கொள்ளலாம்.