2019ல் பொள்ளாச்சியில் ஒரு கும்பல் பல பெண்களை பாலியல் துன்புறுத்தல் செய்து வீடியோ பதிவு செய்து பணம்பறிப்பு மற்றும் மிரட்டல் செய்து வந்தது வெளிச்சத்துக்கு வந்தது.

இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்ட ஒரு பெண் துணிச்சலுடன் கொடுத்த புகாரினால் இந்த கொடூரத்தை செய்த கும்பலை போலீசார் பிடித்தனர். இந்த வழக்கில், சபரிராஜன், திருநாவுக்கரசு,வசந்தகுமார், சதீஷ், மணிவண்ணன், அருளானந்தம், ஹிரன்பால், பாபு, அருண்குமார் ஆகிய 9 பேர் கைது செய்யப்பட்டனர்.

விசாரணையில் 2016 முதல் 2018 வரை இதுபோன்ற பாலியல் துன்புறுத்தல் மற்றும் வீடியோ பதிவு செய்த கொடூரம் வெளிச்சத்துக்கு வந்தது. 2019 முதல் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில் விசாரணை முடிவடைந்துள்ளது. இதன் தீர்ப்பு நாளை (13.5.25) கோவை மகளிர் நீதி மன்றத்தில் வழங்கப்படவுள்ளது.