கோவை சரவணம்பட்டியில் இயங்கி வரும் டாக்டர்.எஸ்.என்.எஸ் ராஜலக்ஷ்மி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தொழில் முனைவோருக்கான சிறப்பு பயிற்சி மையமான SNS இன்னோவேஷன் ஹப் நிறுவப்பட்டுள்ளது. 

 

இந்த மையத்தின் திறப்பு விழா இன்று (27-03-2023) நடைபெற்றது.ஸ்டார்ட் ஆப் தமிழ் நாடு அமைப்பில் இயங்கும் 'ஆடுகளம்' என்ற ஐடியா பிட்ச் அவர்களின் வழிகாட்டுதலுடன் நிகழ்வு தொடங்கப்பட்டது.

 

செயற்கை நுண்ணறிவு (A.I.), கல்வி சார் தொழில் நுட்பம் (Ed Tech), மருத்துவம் சார் தொழில்நுட்பம் (Med Tech) போன்ற பல்வேறு துறைகளைச் சேர்ந்த ஸ்டார்ட்-அப்களில், தங்கள் யோசனைகளை முன்வைத்து வளரும் தொழில்முனைவோருக்கு, அந்த யோசனையை மேம்படுத்துவதற்கும் வணிகமயமாக்கலுக்கும் எந்த விதத்தில் முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும் என்பது பற்றிய விவரங்கள் வழங்கப்பட்டது.

 

இந்த திறப்பு விழாவில் கோயம்புத்தூர் ட்ரோல் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் இணை இயக்குநர் கார்த்திக் எத்திராஜ், கோயம்புத்தூர் இ-ஆடிட்டர் அலுவலகத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சதீஷ் ராமலிங்கம், ஸ்டார்ட்அப் திட்டத் தலைவர் சக்திவேல் CEO டி.என்., ஈரோடு மண்டல மையம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

 மேலும் சிறப்பு விருந்தினர்களாக நட்ஸ் டெக்னோவேஷன் சிஇஓ தகௌதம் கிருஷ்ணமூர்த்தி, பயிர்கால் தலைமை நிர்வாக அதிகாரி விக்னேஷ் குமார் எம்., டிரக் டாக்ஸி நிறுவனர் நோயல் ஜெரால்ட் எம். கலந்து கொண்டனர்.