மாணவிகளை போல இனி தமிழகத்தில் மாணவர்களுக்கும் மாதம் ரூ.1000 கிடைக்கும் - தமிழக அரசு அறிவிப்பு!
- by David
- Jun 14,2024
Tamil Nadu
அரசு பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு பயின்று கல்லூரி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் புதுமைப் பெண் திட்டத்திற்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவிக்கின்றனர். புதுமைப் பெண் திட்டம்' போல வரும் ஆகஸ்ட் முதல் கல்லூரி மாணவர்களுக்கு 'தவப்புதல்வன்' திட்டம் செயல்படுத்தப்படும்,
இந்த திட்டத்தின் கீழ், கல்லூரி மாணவர்களுக்கு ஆகஸ்ட் மாதம் முதல் மாதம் 1000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என சென்னை நேரு ஸ்டேடியத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடைபெற்ற ஐம்பெரும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு அறிவித்தார்.