தமிழ் நாட்டில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் 10ம் வகுப்பு மற்றும் +1 பொது தேர்வு எழுதிய மாணவர்களுக்கு நாளை (16.5.25) ஒரு மிக முக்கியமான நாள்.

நாளை காலை 9 மணிக்கு 10ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகளும், மதியம் 2 மணிக்கு வெளியாக உள்ளது. தமிழ்நாடு பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் நாளை தேர்வு முடிவுகளை அறிவிப்பார்.

தேர்வு முடிவுகளை tnresults.nic.in, dge.tn.gov.in மற்றும் results.digilocker.gov.in என்ற இணையதளங்களில் பார்க்கலாம். இந்த ஆண்டு 8.94 லட்சம் 10ம் வகுப்பு மாணவர்களும், சுமார் 8 லட்சம் 11ம் வகுப்பு மாணவர்களும் தேர்வு எழுதியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.