பொள்ளாச்சியில் ரயில் நிலையம் செல்லும் வழியே இருந்த அரசு மதுபான கடையை திருவள்ளுவர் சிலை அமைந்துள்ள பகுதி அருகே மாற்றம் செய்ததை கண்டித்து தமிழக வெற்றிக் கழகம் சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது.

இந்த மதுபான கடையை வேறு இடத்திற்கு மாற்ற வலியுறுத்தி அங்கு கோவை தெற்கு மாவட்ட த.வெ.க சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியினர் 100க்கும் மேற்பட்டோர், பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் இந்த டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்ய வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

மேலும் இந்த கடை பேருந்து நிறுத்தம் அருகிலேயே உள்ளது என்பதால் பொதுமக்களுக்கு இடையூறாக இது அமையும் என்பதால் இந்த கடையை உடனடியாக வேறு இடத்துக்கு இடமாற்றம் செய்ய வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.