த.வெ.க. தலைவர் விஜய் தனது தேர்தல் பிரச்சாரத்தை கோவையில் அக்டோபர் மாதம் செய்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அந்த தேதி மாற்றப்படுவதாக தகவல் வெளிவந்தது. 

இந்த நிலையில் அவரின் அக்கட்சி சார்பில் மாற்றியமைக்கப்பட்ட  அதிகாரபூர்வ பயணத்திட்டம் வெளியாகி உள்ளது. அதன்படி விஜய் 14.2.2026 அன்று கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் தனது சுற்றுப்பயணத்தை மேற்கொள்ளவுள்ளார். முன்னதாக 25.10.25 கோவை அருகே உள்ள திருப்பூர் மற்றும் ஈரோட்டுக்கு வருகை தருகிறார்.