கோவையை சேர்ந்த 2 அரசு பள்ளி மாணவிகளுக்கு நாளை அமைச்சரிடம் பரிசு!
- by David
- Jan 23,2025
Coimbatore
கோயம்புத்தூர் KPR கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், கடந்த 4.01.2025 அன்று நடைபெற்ற 1 முதல் 5ம் வகுப்பு வகுப்பு வரையிலான மாணவ, மாணவியருக்கான மாநில அளவிலான கலைத் திருவிழா போட்டிகள் நடைபெற்றன.
அதில் தேசபக்தி பாடல் பிரிவில், 'கோயம்புத்தூர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி - ஷாஜகான் நகர்' பள்ளியை சேர்ந்த 5ம் வகுப்பு மாணவி எஸ். S.மனஸ்வினி கலந்துகொண்டு முதலிடம் பெற்றுள்ளார். மேலும்,மெல்லிசை தனிப்பாடல் போட்டியில் மாநகராட்சி தொடக்கப்பள்ளி, காளப்பட்டி பள்ளியில் பயிலும் 5ம் வகுப்பு மாணவி அ.ஆன்ரினால் பிரின்சி மாநில அளவில் இரண்டாம் பரிசும் பெற்றுள்ளார்.
இவர்களுக்கு நாளை (24.01.2025) சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெறும் விழாவில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷிடம் விருது பெற உள்ளனர்.