கோடை என்பது கோவை போன்ற தமிழ் நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள மாவட்டங்களுக்கு மார்ச் - ஏப்ரல் மாதத்தில் அதிக அளவில் இருக்கும். ஏப்ரல் மாதம் இன்னும் 9 நாட்களில் நிறைவடைய உள்ள நிலையில் இந்த காலத்தில் வானிலை எப்படி இருக்கும் என மக்கள் மத்தியில் கேள்வி உள்ளது.

இதுகுறித்து கோவையை சேர்ந்த இளம் வானிலை ஆய்வாளர் சந்தோஷ் கிருஷ்ணன் கூறியுள்ளதாவது :-

ஏப்ரல் இறுதி வரை கோவை உள்ளிட்ட மேற்கு மண்டலத்தில் பெரிய அளவில் மழைக்கான வாய்ப்பு எதுவும் இருப்பதாக அறிகுறிகள் இல்லை. இந்த காலத்தில் மேற்கு மண்டலத்தில் அங்கும் இங்கும் மிதமான இடியுடன் கூடிய மழை பெய்யலாம் ஆனால் அது பரவலாக இருக்காது. அடுத்த 2 வாரம் வெப்பம் கடுமையாக இருக்கக்கூடும். ஆனால் மே மாதத்தில் மேற்கு மண்டலத்தில் நல்ல மழைக்கு வாய்ப்புள்ளது.

இவ்வாறு அவர் கணித்துள்ளார்.

படம் : @peri_periasamy/x